மௌனத்தில் மலர்ந்த காதல்

அத்தியாயம் 1

தனிமையின் ராஜா

மும்பையின் உயர்ந்த வானளாவிய கட்டிடங்களுக்கிடையில், இரவின் மௌனம் சற்று கனமாகத் தங்கியிருந்தது.
அந்த silence- ஐ கூட தாண்டி, நகரத்தின் விளக்குகள் மட்டும் உயிரோடு இருப்பதைப் போல மின்னின. அந்த உயரத்தில்… ஒரு கண்ணாடி சுவரின் அருகே… ஒருவன் மட்டும் நின்றிருந்தான்.

அஸ்வின் சிவா.
இந்தியாவின் top 10 business tycoons பட்டியலில் இடம்பிடித்த பெயர்.
ஒரே கையொப்பத்தில் கோடிகளை நகர்த்தும் சக்தி. ஒரே வார்த்தையில் நூற்றுக்கணக்கான ஊழியர்களின் வாழ்க்கை மாற்றப்படும் அதிகாரம்.


ஆனால்…
அந்த உயரத்தில் நின்ற அவனுடைய உள்ளம் மட்டும், ஒரு சிறிய அறையின் மூலையில் உட்கார்ந்த குழந்தையைப் போல தனிமையாக இருந்தது.

கையில் கருப்பு காபி கப். கண்ணாடிக்குப் புறம்பாக நகரம் ஒளிர்ந்தது.
உள்ளே… அவனது மனம் மட்டும் இருளில் மூழ்கியது.


“இந்த நகரத்தில் ஒளி அதிகம்... ஆனா என் உள்ளத்துக்கு மட்டும் ஏன் இருள் தீரவே மாட்டேங்குது?”


அவன் மனதுக்குள் சொன்ன அந்த வார்த்தைகள், கண்ணாடி சுவரில் பிரதிபலிப்பை விட கனமானதாக இருந்தது. அவனுடைய கைபேசி மெதுவாக vibrate ஆனது.
Screen-ல் பெயர்: Rhea Kapoor Mumbai high society-யில் பிரபலமான socialite.

Message:
"Hey Ashwin… tonight villa launch party. Pick me up?"
அவன் ஒரு நொடிக்கு கூட பதில் எழுதவில்லை. Screen-ஐ lock செய்து, phone-ஐ table மேல் வைத்துவிட்டான்.

அந்த silence தான் அவனுக்கு பழக்கம். பெரிய meetings-ல் applause. கைதட்டல். Press interviews-ல் பாராட்டு. Parties-ல் பெண்களின் காதல் சிரிப்புகள்.
ஆனால் அந்த எல்லா சிரிப்புகளுக்குள் அவன் கண்டது ஒரே விஷயம்.

ஆசை. பணத்தின் மேல் ஆசை. அந்த பெயரின் மேல் ஆசை.

ஒரு முறையாவது யாராவது… "அஸ்வின்" என்ற மனிதனை காதலித்தார்களா?
அல்லது "அஸ்வின் சிவா – Billionaire" என்ற tag-ஐ மட்டும்தானா?
அந்த கேள்வி தான் அவனைக் கொன்றுகொண்டிருந்தது.